For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேலும் தாமதமாகும் ராம்குமார் பிரேதப் பரிசோதனை வழக்கு.. நாளைதான் விசாரணை!

Google Oneindia Tamil News

சென்னை: ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ள ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கு நாளை விசாரிக்கப்படும் என்று 3வது நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோரிடம் ராம்குமாரின் உடல் ஒப்படைப்பதில் மேலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த ராம்குமார் புழல் சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

3rd judge to decide tomorrow Ramkumar post-mortem

இந்நிலையில், பிரேத பரிசோதனையின் போது தங்களது மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளுக்குள் தனியார் மருத்துவரை நியமிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 3வது நீதிபதியாக கிருபாகரனை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் நியமித்துள்ளார்.

இதனையடுத்து, நீதிபதி கிருபாகரனை நேரில் சந்தித்து தனியார் மருத்துவர் குறித்து கோரிக்கை வைத்தார் ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் வழக்கறிஞர் சங்கர சுப்பு. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருபாகரன் நாளை இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ராம்குமாரின் பிரேத பரிசோதனை மேலும் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, ராம்குமாரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

English summary
3rd judge Kirubakaran will decide tomorrow to appoint private Doctor in Ramkumar post mortem case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X