பழைய குற்றால அருவியில் சோகம்: குழாயில் சிக்கி 3 வயது குழந்தை பலி
தென்காசி: பழைய குற்றாலத்தில் பெற்றோருடன் குளித்த 3 வயது பெண் குழந்தை அருவிப்பகுதியில் உள்ள குழாயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக, குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நாகப்பட்டினத்தை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை அருவிப்பகுதியில் நின்று கொண்டிருந்தது. அருவியில் குளித்து கொண்டிருந்த பெற்றோர் குழந்தையை கவனிக்க தவறியதால், குழந்தை தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு, நீர் வழிந்தோடும் குழாய் பகுதியில் சிக்கி கொண்டது. சற்று நேரம் கழித்து குழந்தையை காணாமல் பெற்றோர் அங்குமிங்கும் பதறியடித்து தேடினர்.
சிறிது நேரம் கழித்து குழாயில் குழுந்தையின் சட்டை சிக்கியிருந்தது தெரிந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அது இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications