தூத்துக்குடி: காருக்குள் விளையாடிய 4 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த காருக்குள் விளையாடிய, குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேடநத்தம் கிராமத்தில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் 4 குழந்தைகள் 11 மணியளவில் விளையாடிக்கொண்டிருந்தனர். காரின் கதவை பூட்டியதால் அது ஆட்டோ லாக் ஆகிவிட்டது.
இதில் மூச்சுத்திணறிய குழந்தைகள் காரின் கதவை திறக்க முயன்றனர் அது முடியவில்லை. இதனால் குழந்தைகள் அழுதுள்ளனர்.
திருவிழா சமயம் என்பதால் ஒலிபெருக்கிகள் சத்தத்தில் குழந்தைகளின் அழுகுரல் வெளியே கேட்கவில்லை. இதில் குழந்தைகள் நால்வரும் காருக்குள் மயங்கிவிட்டனர்.
நீண்ட நேரமாக குழந்தைகளைக் காணாமல் பெற்றோர்கள் தேடிய நிலையில் பூட்டிய காருக்குள் மதியம் 1 மணியளவில் எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது குழந்தைகள் மூச்சுப் பேச்சின்றி கிடந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் துரை நேரில் விசாரணை நடத்தினார். உயிரிழந்த குழந்தைகளின் பெயர் முத்தழகு(10), இசக்கியம்மாள்(8), மோசஸ்(7), ஆதி(4) என்பதாகும். உயிரிழந்த 4 குழந்தைகளும் ராஜபாண்டி நகர், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் திருவிழாவிற்காக வேடநத்தம் வந்ததும் தெரியவந்துள்ளது. அந்த கார் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications