அரிவாளுடன் ஆவேசமாக துரத்திய மும்தாஜ்.. மிரண்டு ஓடிய தொப்புள் குமார்.. அண்ணாசாலையில் பரபர கலாட்டா!

ரவுடியை வெட்ட முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அண்ணா சாலையில் நடைபெற்ற அதிரடி காட்சி

    சென்னை: ஒரு மனுஷன் திருந்தி வாழ விட மாட்டாங்க போலிருக்கே. இவங்களும் திருந்தாம அடுத்தவங்களை திருந்தவும் விடாம, கடைசியில் ஆளையே க்ளாஸ் பண்ணிட்டுதான் மறுவேலை பார்க்கறாங்க.

    திருவல்லிக்கேணி பார்டர் தோட்டத்தை சேர்ந்தவர் குமார். ஒரு காலத்தில் இவர் ஒரு பெரிய தாதா.. அதாவது 'டான்'. தாதாக்கள்தான் கெத்து காட்ட ஒரு புனைபெயரை வெச்சிப்பாங்களே.. அதுபோல இவரும் குமார் என்பதை தொப்புள் குமார் என்று வைத்து கொண்டார். வயது 44.

    திருவல்லிக்கேணி, ராயப்பேட்டையில் தொப்புள் குமார் என்றாலே பேமஸ்தான். தொப்புள் பெயரைக் கேட்டாலே வயிறு கலங்குமாம். ஏராளமான அடிதடி கேஸ்கள், கொலை முயற்சி உள்ளிட்ட பல கேஸ்கள் பல ஸ்டேஷன்களில் உள்ளது. இதனால் இவரை கூப்பிட்டு போலீசார் அவ்வப்போது எச்சரித்தும் அறிவுறுத்தியும் வந்திருக்கின்றனர். இதனால் ஒருவழியாக மனசு மாறிய தாதா திருந்தி வாழ ஆசைப்பட்டார். அதாவது தொப்புள் குமார் என்பதிலிருந்து வெறும் குமார் ஆகிவிட்டார். அதோடு மட்டும் இல்லாமல் திமுகவில் சேர்ந்து கட்சி பணியை சிறப்பாக ஆற்றி வருகிறார்.

    மும்தாஜ் தாதா

    மும்தாஜ் தாதா

    குமாரின் தாதா பொறுப்பு இப்போது வேறு ஒருவருக்கு போய்விட்டது. அந்த ஒருவர் யார் என்றால் அது ஒரு பெண். 45 வயது மும்தாஜ் என்பவர். குமார்தான் இப்ப ரொம்ப நல்லவராச்சே.. ஸோ.. எதிரில் நடக்கும் அநீதியெல்லாம் இவரது கண்களுக்கு இப்போது பளிச்சென படுகிறது. மும்தாஜ் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகிறார். இதைப் பொறுக்க முடியாத குமார், மும்தாஜ் மற்றும் அவருடைய ஆட்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டார். இது மும்தாஜ் கும்பலின் காதுகளுக்கு எட்டிவிட்டது.

    சரமாரி வெட்டு

    சரமாரி வெட்டு

    இதையடுத்து மும்தாஜ் கும்பல் குமாரை தீர்த்துகட்ட முடிவு செய்தது. அடியாட்களை தயார் செய்தார் மும்தாஜ். குமார் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே வந்த வந்தபோது மறைந்திருந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்ட தொடங்கியது. இதனால் அலறியடித்து கொண்டு குமார் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

    போலீசில் தஞ்சம்

    போலீசில் தஞ்சம்

    ஆனாலும் மும்தாஜ் கும்பல் விடவேவில்லை. அண்ணாசாலையில் நடுரோட்டில் துரத்தியது கும்பல். இதில் கையில் அரிவாளுடன் வெட்ட முன்னே ஓடியது மும்தாஜ்தான். கடைசியில், யாருடைய அறிவுரையால் குமார் திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கிறாரோ, அதே அண்ணாசாலை போலீசாரிடம் தஞ்சம் அடைந்தார். தன்னை துரத்தி வெட்டும் கும்பல் குறித்து காவல்நிலையத்தில் புகாரும் அளித்தார்.

    மும்தாஜ் கைது

    மும்தாஜ் கைது

    அதற்குள் மும்தாஜ் கும்பல் எஸ்கேப் ஆகிவிட்டது. படுகாயமடைந்து கிடந்த குமாரை போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமார் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து, மணிகண்டன் 24, கருத்து பாஸ்கர் 23, நாலுமணி 23, மற்றும் முக்கிய தலைவியும், தாதாவுவான மும்தாஜ் ஆகியோரை நேற்றிரவு கைது செய்தனர். கணக்கிடலங்காத கேஸ்கள் மும்தாஜ் மேல் ஏற்கனவே உள்ளதாம்.

    அவ்வளதான் வாழ்க்கை

    அவ்வளதான் வாழ்க்கை

    டானா இருந்தாலும் டானா இருக்கிற வரைதான் பாதுகாப்பு.. டானா இல்லாட்டி டானாவே இருந்தாலும் பாதுகாப்பு கிடையாது பாஸ்.. புரியுதா.. புரியலையா.. தானும் நல்லா வாழாம, அடுத்தவனையும் நல்லா வாழ வைக்காது போல இருக்கு இந்த சமுதாயம்.. இது புரியுதுல்ல பாஸ்.. அவ்வளவுதாங்க வாழ்க்கை!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+