For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பாண்டி ஜூஸ்".. ஊத்திக் கொடுத்த செல்வி, சாந்தா.. கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

பாண்டி ஜூஸ் என்ற பெயரில் சாராயம் விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜூஸ் என்ற பெயரில் சாராய விற்பனை ஜரூர்!

    கும்பகோணம்: பேரு என்னவோ "பாண்டி ஜூஸ்".. ஆனால் அந்த ஜூஸ் பாக்கெட்டுகளில் சாராயத்தை நிரப்பி கொண்டிருந்தது செல்வி, சாந்தா என்ற இரண்டு பெண்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா!

    கும்பகோணம் பகுதியில் கள்ளச்சாராயம் தயாரித்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை பகுதிகளில் விற்பதாக போலீசாருக்கு தகவல்கள் வந்து கொண்டே இருந்தது. அதனால் எங்கிருந்து, யார், இந்த சாராயத்தை தயாரிக்கிறார்கள் என்று போலீசார் ரகசிய கண்காணிப்பில் இறங்கினர்.

    4 people including 2 women arrested for illicit liquor sale

    அதன்படி பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு குறிப்பிட்ட அந்த வீட்டை நோட்டமிட்டனர். அந்த ஒரு வீட்டுக்கு மட்டும் 2 பெண்கள், 5, 6 ஆண்கள் வந்து போவது, கார்கள், பைக்குகள் வந்து போவது, மூட்டைகளை வண்டிகளில் ஏற்றி கொண்டு போவது என வித்தியாசமான நடவடிக்கைகள் தென்பட்டன.

    அதனால், அதிரடியாக அந்த வீட்டுக்குள் போலீசார் நுழைந்தனர். அப்போது, 2 பெண்கள் ஜூஸ் என்று பெயர் பொறித்த பாக்கெட்டில் சாராயத்தை ஊற்றி நிரப்பி கொண்டிருந்தனர். அவர்கள் பெயர் சாந்தா, செல்வி... மேலும் ராஜ், ரபிக் என்பவர்களும் உடந்தையாக இருந்தனர். இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் இந்த சாராயத்தை விற்க, ஊர் ஊருக்கு ஏஜென்ட்டுகளையும் வைத்துள்ளனர். அவர்களை தேடி வருவதுடன் 750 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இப்படி சாராயம் வித்தே இவர்கள் கார், பைக் என சொகுசாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். அந்த வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் இவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    4 People arrested by Kumbakonam Police for illicit liquor sale and 750 liter liquor were confiscated from them
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X