தருமபுரி அருகே பயங்கரம்.. கைகள், கண்கள் ஒன்றாக கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் மிதந்த 4 சடலங்கள்
கிணற்றிலிருந்து ஒரே குடும்பத்தின் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தருமபுரி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் கிணற்றினுள் கல்லால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரிமங்கலம் அடுத்து உள்ள கிராமம் சவுளுகொட்டாய். இங்கு வசித்து வருபவர் லோகநாதன். இவரது மனைவி நதியா. இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 12 வயதான மூத்த மகன் சஞ்சய்க்கு கால்கள் நடக்க முடியாத நிலை.

மகனின் உதவிதொகை
லோகநாதன் கிரானைட் தொழில் செய்து வருபவர். ஆனாலும் சரியாக வேலைக்கு போகாத காரணத்தினாலும், குடிப்பழக்கத்திற்கு அடிமையான காரணத்தினாலும் கணவன்-மனைவியே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தன் மகனுக்கு வழங்கப்படும் அரசு உதவித்தொகை பணத்தை கேட்டு மனைவியை அடித்து பிடுங்கி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.

4 பேர் மாயம்
கடந்த வியாழக்கிழமையும் தம்பதி இடையே சண்டை சண்டை ஏற்பட்டதால் மனமுடைந்த நதியா, தன் மகன்கள் 3 பேரையும் அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ஆனால் அங்கிருந்து அன்று மாலையே மீண்டும் பிள்ளைகளை அழைத்து கொண்டு திரும்பி வந்துவிட்டார். ஆனால் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதனால் குடும்பத்தார் பல இடங்களில் அவர்களை தேடியும் கிடைக்கவில்லை என்பதால் காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.

உடல்கள் மிதந்தன
இந்நிலையில், லோகநாதனுக்கு சொந்தமான விவசாய கிணறு ஒன்று உள்ளது. 40 அடி ஆழமள்ள இந்த கிணற்றில் இன்று காலை 2 சிறுவர்களின் உடல்கள் மிதந்ததை அக்கம்பக்கத்தினர் கண்டு போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு புகார் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 சிறுவர்களின் வாய், கண் ஒன்றாக கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனர். இதையடுத்து மீண்டும் அதே கிணற்றில் தேடி பார்த்தபோது நதியா மற்றும் இன்னொரு சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இவர்களது உடலும் ஒன்றாக கல்லுடன் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

லோகநாதன் குடும்பத்தார்
4 பேரும் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர். லோகநாதனிடம், அவரது குடும்பத்தார் மீதும் சந்தேகம் இருப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையிலும் போலீசார் லோகநாதனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் லோகநாதன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து கொன்று கல்லைக் கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரது குடும்பத்தாரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications