63 வயது பாட்டியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவர்கள்.. மேலும் பல பெண்களைக் கொன்றதாக பரபரப்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பாக அப்பகுதியில் மேலும் பல பெண்கள் இதுபோல பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
பாட்டி கொலை வழக்கில் சிக்கிய நபர்களே இதுகுறித்து போலீஸில் தகவல் தெரிவித்துள்ளனர். அஞ்சு கிராமம் அருகே உள்ள ஸ்ரீலட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 63 வயதான வீரலட்சுமி. மாடன்குடியிருப்பு பகுதியில் நடைபெறும் ஜெபக்கூட்டத்துக்கு வழக்கமாக செல்வார். ஏப்ரல் 25ம் தேதி இதுபோல போயுள்ளார். ஆனால் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவானது. போலீஸார் தேடி வந்தனர். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. அந்த செல்போன் என்னவானது என்று விசாரித்தபோது, நெல்லை மாவட்டம் ஆவரைக்குளம் பகுதியில் அந்த செல்போன் உபயோகத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர் போலீஸார்.

ஆரல்வாய்மொழியில் உடல் புதைப்பு
இதையடுத்து போலீஸ் குழு அங்கு விரைந்தது. அங்கு சிலர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது வீரலட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது தெரிய வந்தது. ஆரல்வாய்மொழி கண்ணுப்பொத்தை காட்டுப்பகுதியில் உடல் வீசப்பட்டதும் தெரியவந்தது.

நிர்வாண கோலத்தில்
இதையடுத்து கண்ணுப்பொத்தை பகுதியில் போலீஸார் உடலைத் தோண்டி எடுத்தனர். நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் உடல் இருந்தது. பிரேதப் பரிசோதனைக்கு உடலை அனுப்பினர் போலீஸார். சிக்கியவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

நிர்பயாவை மிஞ்சிய கொடூரம்
டெல்லி நிர்பயா கொடூரத்தை மிஞ்சும் வகையிலான செயலில் இந்த கொடூரர்கள் ஈடுபட்டுள்ளனர். அதாவது மொத்தம் 7 பேர் சேர்ந்து வீரலட்சுமியை பலாத்காரம் செய்துள்ளனர். அதில் 2 பேர் 17 வயது சிறுவர்கள் ஆவர். இந்த சிறுவர்கள் உள்பட 4 பேர் தற்போது கைதாகியுள்ளனர். 3 பேரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பைக்கில் லிப்ட் கேட்டதால்
இந்த 7 பேரில் ஒருவரை வீரலட்சுமிக்குத் தெரியமாம். சம்பவத்தன்று ஜெபக் கூட்டம் முடிந்து திரும்பியபோது இந்த நபர் பைக்கில் வந்துள்ளார். அவரை நிறுத்திய வீரலட்சுமி, கால் வலிக்கிறது, வீட்டில் போய் கொண்டு விடுப்பா என்று கேட்டுள்ளார். அந்த அயோக்கியன் வீரலட்சுமியை பைக்கில் ஏறறிக் கண்டு கண்ணுப்பொத்தைக்கு கூட்டிப் போயுள்ளான். வழியில் வீரலட்சுமி கத்திக் கூச்சலிட்டுள்ளார். ஆனால் அந்த கொடூரன் வேகமாக காட்டுப் பகுதிக்குள் போய் விட்டான்.

நிர்வாணமாக்கி கொடூரம்
அங்கு வைத்து வீரலட்சுமியை கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கி அவரை பலாத்காரம் செய்துள்ளான். அத்தோடு நில்லாமல் தனது நண்பர்களுக்கும் போன் போட்டு கூப்பிட்டுள்ளான். நண்பர்கள் 6 பேர் வந்துள்ளனர். அனைவரும் வீரலட்சுமியை நாசப்படுத்தியுள்ளனர். அவர்களின் செயலால் உடலாலும், மனதாலும் அதிர்ந்து போன வீரலட்சுமி அத்தனை பேரையும் போலீஸில் பிடித்துக் கொடுக்காமல் விட மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்து விட்டனர்.

சிக்கிய நான்கு பேர்
கைதான 4 பேரையும் போலீஸார் தீவிரமாக விசாரித்தபோது இவர்கள் மேலும் 4 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. அவர்களையும் இதே பகுதியில்தான் புதைத்துள்ளனர். இந்த கொடூரக் கும்பல் எத்தனை பெண்களை இதுபோல கொலை செய்து புதைத்துள்ளது என்று தெரியவில்லை.

தீவிர விசாரணை
இதனால் அவர்களை தீவிரமாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும் கண்ணுப்பொத்தை பகுதியில் இவர்களால் கொல்லப்பட்டு வீசப்பட்ட பெண்களின் உடலையும், எலும்புகளையும் மீட்கும் பணியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications