கடையநல்லூர் அருகே கார் மீது லாரி பயங்கர மோதல் - 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி
நெல்லை: சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பயணம் செய்த கார் இன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள்.
சென்னையைச் சேர்ந்தவர் அலி இப்ராகிம். 64 வயதான இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவரது மனைவி ஷாகுல் மா. 60 வயது. இவர்கள் இருவரும் தங்களது மகள் லெக்சிகா மற்றும் லெக்சகாவின் மகன் 6 வயது ரிஸ்கான், மகள் 5 வயது ஜஸ்ரா ஆகியோருடன் ஈரோட்டுக்கு காரில் சென்றனர்.

அங்கு வசித்து வரும் இப்ராகிமின் இன்னொரு மகளான இஷானை அவரது வீட்டில் பார்த்தனர். பின்னர் இஷானையும் அழைத்துக் கொண்டு காரில் நெல்லை சென்றனர். காரை இப்ராகிம் ஓட்டி வந்தார். முன் பக்க இருக்கையில் இரு பேரக் குழந்தைகளையும் அமர வைத்துள்ளனர். பின் இருக்கையில் இப்ராகிமின் மனைவி மற்றும் மகள்கள் பயணித்துள்ளனர்.

கார் கடையநல்லூர் பகுதியில் வந்தபோது திடீரென ஒரு லாரியுடன் பலமாக மோதி விட்டது. இதில் காரின் முன் இருக்கையில் பயணித்த இப்ராகிம், அவரது மனைவி மற்றும் இரு பேரக் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இரு மகள்களும் படுகாயமடைந்த நிலையில் நெல்லை, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications