தமிழகத்தில் 40 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு! இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது!
சென்னை: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்கிறது. மொத்தம் 40 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு ஆகிய இடங்களில் டோல் கட்டணம் உயர்கிறது.
தமிழகத்தில் 78 சுங்கச் சாவடிகள் உள்ளன. இங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1992 ஆம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதியும், 2008ஆம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் 1ஆம் தேதியும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கச் சாவடியில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச் சாவடிகளில் 40 சுங்கச் சாவடிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு ஆகிய 3 இடங்களில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்களின் வகைகளின்படி 6 வகையான கட்டணங்கள் நிர்ணயித்து வசூலிக்கப்படவுள்ளது.
இதுகுறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடி, திண்டிவனம்-ஆத்தூர், நெல்லூர், நாங்குநேரி, சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி, பள்ளிக்கொண்டா, புதுக்கோட்டை-வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, வானகரம், சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், இந்த கட்டணம் தொடர்பான அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது.
- வண்டலூர்- மீஞ்சூர் வரை கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.140 கட்டணம்
- இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ.225 கட்டணம்
- லாரி, பஸ்கள் ரூ.470 மற்றும் 3 அச்சு வணிக வாகனங்களுக்கும் ரூ.510 ரூபாய் வரை கட்டணம்
- 4 முதல் 6 அச்சு கனரக கட்டுமான வாகனங்களுக்கு ரூ.735 மற்றும் 7 முதல் அதற்கு மேல் அச்சு உள்ள வாகனங்கள் ரூ.895 கட்டணம்
- நெமிலிச்சேரி வரை கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20 கட்டணம்
- இலகுரக வணிக வாகனம் ரூ.40. லாரி, பஸ்கள் ரூ.85, 3 அச்சு கனரக வாகனங்களுக்கு ரூ.90. ரூ.130, ரூ.160 கட்டணம்
- பாடியநல்லூர்- மீஞ்சூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.15, லாரி, பஸ்கள் ரூ.75, இதர கனரக வாகனங்களுக்கு ரூ.80, ரூ.115, ரூ.140 கட்டணம்
அனுமதிக்கப்பட்ட சுமையின் எடைக்கு அதிகமாக சரக்கு ஏற்றி வரும் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலிருந்து 10 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
-
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications