எல்லை தாண்டி வந்தால் இனி படகுகள் கிடையாது... இலங்கை எச்சரிக்கை- ஊர் திரும்பிய 45 மீனவர்கள் தகவல்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 45 தமிழக மீனவர்கள் மண்டபம் வந்து சேர்ந்தனர். இவர்கள் பல்வேறு துறை அதிகாாிகளின் விசாரணைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில், எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க நேரிட்டால், படகுகளை விடுவிக்காத வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர இலங்கை அரசு முயற்சித்து வருவதாக நாடு திரும்பிய ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 106 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க அந்நாட்டு அரசு பரிந்துரை செய்ததை அடுத்து, நீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.

இலங்கையில் 50 நாட்களுக்கும் மேலான சிறை தண்டனை அனுப்பவித்த பின்னர் நேற்றிரவு ஊர் திரும்பிய ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 45 பேர், இலங்கை அரசு படகுகளை விடுவிக்காத வகையில் சட்டம் கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும், மீனவர்கள் பத்திரமாக ஊர் திரும்பியதை அடுத்து அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications