For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூர் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 மூட்டை குட்கா பறிமுதல்: டிரைவர் தப்பி ஓட்டம்

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற குட்கா, மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 மூட்டை குட்கா பறிமுதல்-வீடியோ

    வேலூர்: வேலூரிலிருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 மூட்டை குட்கா மற்றும் 1 டன் ரேஷன் அரிசி உள்ளிட்டவற்றை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

    காட்பாடி செங்குட்டை பகுதியில் தாசில்தார் ஜெயந்தி, உட்பட ஏராளமான அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வேலூரில் இருந்து ஆந்திராவை நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட ஒரு காரை நிறுத்தினர். காரை நிறுத்திய உடனேயே டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    5 Bundle Gudkha seized in Vellore

    பின்னர் காரில் நடத்திய சோதனையில் 5 மூட்டை குட்கா, ஒரு டன் ரே‌ஷன் அரிசி, 40 கிலோ கோதுமை மற்றும் ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 5 மூட்டை குட்காவை காட்பாடி வட்டார உணவுக் கட்டுப்பாட்டு அலுவலரிடமும்,ரே‌ஷன் அரிசியை திருவலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனிலும் ஒப்படைத்தனர்.

    குட்கா உள்ளிட்டவற்றை கடத்தி வந்தது யார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் யார் என்பன குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    English summary
    The five bundles of Gudkha were seized in Andhra Pradesh, near Vellore. The police, who were engaged in vehicle tactics at Katpadi Chenguttai, stopped a car from Vellore to Andhra. The driver then fled out of the car and then took 5 bags of gudkha and a tonne rice rice to seize 40 kg of wheat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X