ரவுடியை பிடிக்க சென்று தென்காசியில் மலையில் சிக்கிய போலீஸ்.. 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடையம் பொத்தையில் பதுங்கி இருந்த ரவுடியை பிடிக்க தென்காசி போலீசார் சென்றனர். இருப்பினும், நேற்றிரவு பெய்த கனமழையால் 5 காவலர்கள் மலையில் இருந்து இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். சுமார் 10 மணி நேரத் தீவிர முயற்சிக்குப் பிறகு அந்த 5 காவலர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தென்காசியில் உள்ள ரவுடி பாலமுருகன் என்பவர் பொத்தையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவர் மீது தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளனர். அவர் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தவுடன் அவரை பிடிக்க போலீசார் அங்குச் சென்றனர்.

ரவுடி பாலமுருகன்
கடையம் பகுதியில் உள்ள பொத்தையில் ரவுடி பாலமுருகன் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் அங்குச் சென்றனர். டிரோன் மூலம் கண்காணித்த போது பாலமுருகன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் மலையின் மீது ஏறினர்.
தீயணைப்பு வீரர்கள்
அப்போது கனமழை பெய்த நிலையில், எதிர்பாராத விதமாக 5 போலீசார், மீண்டும் இறங்க முடியாமல் சிக்கித் தவித்தனர். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு அதிகாரிகள் விரைந்தனர். சுமார் 50+ தீயணைப்பு படையினர் காவலர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 10 மணி நேரத் தீவிர முயற்சிக்குப் பிறகு, சிக்கிய காவலர்கள் 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து ரவுடி பாலமுருகனை பிடிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. முதலில் 3 காவலர்கள் மீட்கப்பட்ட நிலையில், அதன் பிறகு தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு 2 காவலர்கள் மீட்கப்பட்டனர்.
என்ன நடந்தது
இப்போது பிடிக்கப்பட்ட பாலமுருகன் மீது தமிழ்நாட்டில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கேரளாவிலும் கூட திருட்டு உட்படச் சில வழக்குகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு அவர் குற்ற வழக்கு ஒன்றில் கேரளாவில் கைது செய்யப்பட்டிருந்தார். கேரளச் சிறையில் தான் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.
அப்போது மற்றொரு வழக்கு விசாரணைக்காக அவரை தமிழ்நாடு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது தான் அவர் போலீசாரை ஏமாற்றிவிட்டுத் தப்பிச் சென்றார். அவர் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க போலீசார் தீவிர முயற்சியை எடுத்தனர். நேற்று மாலை தான் பாலமுருகன் இந்த மலையில் பதுங்கியதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை பிடிக்கச் சுமார் 20 போலீஸ் மலையின் மீது ஏறினார்கள்
கனமழை
அப்போது திடீரென அங்கு எதிர்பாராத வகையில் கனமழை கொட்டியது. இதில் 5 காவலர்கள் இறங்க முடியாமல் அங்கேயே சிக்கிக் கொண்டனர். இது குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அவர்களை மீட்க முயற்சி எடுக்கப்பட்டது. இருப்பினும் மழை மற்றும் இரவு நேரம் என்பதால் உடனடியாக அவர்களை மீட்க முடியவில்லை
இதனால் இரவு முழுக்க போலீசார் கடும் குளிரில் சிக்கினர். விடிய விடிய மீட்புப் பணிகளும் நடந்தது. முதலில் மூன்று காவலர்கள் மீட்கப்பட்ட நிலையில், அதன் பிறகு இரு காவலர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications