இதை இதை எல்லாம் தான் ஆபீஸில் செய்யக் கூடாது
சென்னை: அலுவலகத்தில் என்னென்ன செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
காலை 9 மணிக்கு அலுவலகத்திற்குள் நுழைந்தால் மாலை 6 மணிக்கு தான் வெளியே வருகிறோம். வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் வேலை பார்க்கிறோம். அப்படி வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் நல்லவிதமாக பழகுவது அவசியம்.
இந்நிலையில் அலுவலகத்தில் என்னென்ன செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

செல்போன் பேச்சு
அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு செல்போனில் சப்தமாக பேசாதீர்கள். அது பிறரை எரிச்சல் அடைய வைக்கும். மேலும் உங்கள் மீது அவர்களுக்கு வெறுப்பும் ஏற்பட வழிவகுக்கும்.

நண்பேன்டா
பணி வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு. அது அவ்வாறே இருக்க அலுவலகத்தில் பணிபுரிபவர்களை சிறந்த நண்பர்களாக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அலுவலகத்தில் நண்பேன்டா இருந்தால் அது அசௌகரியத்தில் முடியும்.

பாஸ் செல்லம்
அனைவரும் பாஸுக்கு பிடித்த நபராக இருக்க விரும்புவது சகஜம் தான். ஆனால் நீங்கள் பாஸுக்கு பிடித்த நபராக இருப்பது சக ஊழியர்கள் உங்களை பொறாமை மற்றும் வெறுப்புடன் பார்க்க வழிவகுக்கும்.

அடுத்தவர்கள் கம்ப்யூட்டர்
அலுவலகத்தில் சக ஊழியர்களின் கம்ப்யூட்டரை எட்டிப் பார்ப்பது கூடாது. அவர்கள் எந்த இணையதளங்களை எல்லாம் பார்க்கிறார்கள், யாருக்கு இமெயில் அனுப்புகிறார்கள், இமெயிலில் என்ன எழுதுகிறார்கள் என்பதை எட்டிப் பார்ப்பது நல்ல குணம் இல்லை. உங்கள் கம்ப்யூட்டரை யாராவது எட்டிப்பார்த்தால் கோபம் வருகிறது அல்லவா. அப்படி இருக்கையில் அதையே நீங்கள் ஏன் பிறருக்கு செய்ய வேண்டும்?

சம்பளம்
சக ஊழியர்களிடம் உங்களின் சம்பளம் எவ்வளவு என்று கூறுவதோ இல்லை அவர்களின் சம்பள விவரத்தை கேட்பதோ கூடாது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications