இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!: நாகை மீனவர்கள் 50 பேர் சிறைபிடிப்பு
நாகை: நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் 50 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
நாகை மாவட்டம் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் 5 விசைப்படகுகள், 2 நாட்டு படகுகளில் இன்று அதிகாலை மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 50 மீனவர்களை சிறைபிடித்துள்ளனர்.

5 விசைப்படகுகள், 2 நாட்டுப்படகுகளுடன் நாகை மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து கொண்டு காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த இரு மாத காலத்தில் 258 மீனவர்கள், 57 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்டனர். இதில் 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 43 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளதுடன், இவர்களது 55 படகுகளும் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், 55 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி அனைத்து மீனவர்களும் படகுகளில் வெள்ளை கொடி கட்டி கொண்டு இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், நாகை மீனவர்கள் 50 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றிருப்பது மீனவர்களிடையே மேலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications