மின்கட்டணம் 50 சதவீதத்தை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால் போதும் - மின்வாரியம் அறிவிப்பு
சென்னை: வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மின்கட்டணம் 50 சதவீதத்தை ஜனவரி 31 - ஆம் தேதிக்குள் செலுத்தினால் போதும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மழை பாதித்த இடங்களில் மின்கட்டணம் செலுத்துவதில் உள்ள குழப்பத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மழை பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர் ஜனவரி 31-ஆம் தேதி வரை எவ்வித அபராதமும் இன்றி கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மின்சார பயன்பாட்டு அளவை கணக்கெடுக்காத பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர் முந்தைய மாதத்துக்கான கட்டணத்தை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என்று சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மழை பாதித்த இடங்களில் உள்ள வீடுகளிலும் மின்சார வாரிய ஊழியர்கள் நேரடியாகச் சென்று கணக்கெடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் மழை வெள்ளம் சூழந்ததால் பழுதான மீட்டர் பெட்டிகள், வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஊழியர்கள் செல்ல முடியாத இடங்களில் உள்ளவர்கள் ஆகியோர் முந்தைய மாதத்துக்கான கட்டணத்தில் 50 சதத்தை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால் போதுமானது.
அதிக கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கணக்கெடுக்கும்போது கூடுதல் தொகை அதில் சரிசெய்யப்பட்டும். குறைவாக செலுத்தியிருந்தால் மீதம் உள்ள தொகை அடுத்த முறை சேர்த்து வசூலிக்கப்படும் எனவே 50 சதவீதம் கட்டணம் என்பது சலுகைக் கட்டணம் அல்ல. பின்வரும் மாதத்தில் மீதம் உள்ள தொகை வசூலிக்கப்பட்டுவிடும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications