தவறாமல் மழை பெய்ய வேண்டும்... நாசரேத் கோவிலில் 504 திருவிளக்கு ஏற்றி பெண்கள் பூஜை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள நால்ஆல் வேம்படி சுடலைமாட சுவாமி-சக்தி அம்மன் கோவிலில் பருவமழை தவறாமல் பெய்யவேண்டி 504திருவிளக்கு பூஜை நடந்தது.
நாசரேத் அருகேயுள்ள சின்னமாடன்குடியிருப்பில் ஆன்மிக சிறப்பு வாய்ந்த நால்ஆல் வேம்படி சுடலைமாடசுவாமி-சக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கொடை விழா பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டிற்கான கொடை விழா கணபதி ஹோமம், கும்பாபிஷேகத்துடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து சாமி அழைப்பு, நாலாலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், சிறப்பு மலர் அலங்கார, ஆராதனைகளுடன் சாமக்கொடை, பொங்கல் விழாவுடன் சிறப்பாக நடந்தது.

மழை பெய்ய வேண்டி பூஜை
விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உலக மக்கள் நலமாக வாழவேண்டியும், தமிழகத்தில் பருவம் தவறாமல் மழை பெய்து, விவசாயம் செழித்து பசுமைவளம் சிறக்கவேண்டியும் 504திருவிளக்கு பூஜை நடந்தது.

பக்தர்களுக்குப் பிரசாதம்
விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தென்னகத்தில் வறட்சி
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெயரளவிற்கு கூட மழையில்லாத காரணத்தினால் வறட்சி தலைதூக்கியுள்ளது. வறட்சியின் காரணமாக கால்நடைகள் கூட உண்ண உணவின்றி தவித்து வருகின்றன.

நிலத்தடி நீரைக் காணலியே
ஆறு, குளம், குட்டைகள் வறண்டுவிட்டதால் நிலத்தடி நீர் வறண்டு குடிநீர் தட்டுப்பாடும் தலை விரித்தாடுகிறது.

கழுதைத் திருமணம்.. வேம்பு திருமணம்
இந்நிலையில் மழைபெய்யவேண்டி ஆங்காங்கே கழுதைகளுக்கு திருமணம், அரசு, வேம்பு மரங்களுக்கு திருமணமும் நடத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் நடத்திய திருவிளக்குப் பூஜை
இந்த வரிசையில் சின்னமாடன் குடியிருப்பு கிராமமக்கள் வேம்படி சுடலைமாடசுவாமி, சக்தி அம்மன் ஆலயத்தில் 504திருவிளக்கு பூஜை நடத்தியுள்ளனர். வருணபகவான் கருணை கொண்டு மழையாக பொழிந்து மக்களை மகிழ்வித்தால் சரிதான்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications