தமிழகம், கேரளாவைச் சேர்ந்த 531 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு: பினராயி விஜயன்
தமிழகம், கேரளாவைச் சேர்ந்த 531 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: ஓகி புயலில் சிக்கிய தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 531 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது:

கடலில் தத்தளித்த 393 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொல்லம், திருச்சூரைச் சேர்ந்தவர்கள்.
தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த 100 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் லட்சத் தீவில் 138 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications