சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி!
சென்னை: சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 58 வயதான சீனிவாசன் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கான தலைநகர் ஹைதராபாத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர். டெல்லி உட்பட நாட்டின் சில பகுதிகளிலும் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 58), பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் தனியார் மருத்துவமனையிலிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு டாமிப்ளூ மருந்து வழங்கப்பட்டது. ஆனால் அது அவருக்கு பலனளிக்கவில்லை. இதனால் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்துவிட்டார்.
இதை உறுதி செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள், சீனிவாசனுக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். மருத்துவமனை அளித்த எச்சரிக்கையை மீறியும் அவர் சிகிச்சையை பாதியில் நிறுத்தியுள்ளார்.
பின்னர் அவர் இங்கு வரும்போது அவருக்கு நோய் மிகவும் முற்றியிருந்தது. ஆகையால் கிருமிகள் கட்டுப்படவில்லை. இதனால் அவர் உயிரிழந்தார் என்று கூறியுள்ளனர்.
சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications