தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5வது யூனிடடும் 'அவுட்'!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5வது யூனிட் திடீரென பழுதானதால் மின் வெட்டு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையம் 1979ம் ஆண்டு கட்டப்பட்டது. இது தன் ஆயுட்காலத்தையும் தாண்டி இயங்கி வருகிறது. இதன் முதல் 3 யூனிட்டுகளும் மிகவும் பழமையானது. இந்த யூனிட்டுகளில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அவ்வப்போது மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு இதனை முழுமையாக சரிபார்க்க மின் வாரியம் நிதி ஓதுக்கீடு செய்துளளது. இங்கு மொத்தம் உள்ள 5 யூனிட்டுகளில் 1050 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் 3வது யூனிட்டில் கடந்த நவம்பர் மாதம் முதல் பராமரிப்பு பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை 5வது யூனிட்டில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த யூனிட்டிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரு யூனிட்டுகளிலும் சேர்ந்து 420 மெகா வாட் மி்ன் உற்பத்தி தடைபட்டுள்ளதால் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+