திருமணமான பெண்ணிடம் செல்போன் மூலம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்தவர் அடித்துக்கொலை
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு செல்போன் மூலம் தொல்லை கொடுத்தவர் ஆறு பேரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்து உள்ள படர்ந்தபுளியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான வேல்சாமி(46). அவர் ஒரு முறை தவறுதலாக தனது செல்போனில் இருந்து திருப்பூர் மாவட்டம் ராயபுரத்தை அடுத்து உள்ள பெத்திச்செட்டிபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்பசாமியின்(33) மனைவி லலிதாவுக்கு போன் செய்துவிட்டார்.

இதையடுத்து அவர் அடிக்கடி லலிதாவுக்கு போன் செய்து பேசி தொல்லை கொடுத்ததுடன் ஆபாசமாகவும் பேசியுள்ளார். இது குறித்து லலிதா தனது கணவரிடம் தெரிவிக்க அவர் வேல்சாமிக்கு போன் செய்து தனது மனைவிக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் வேல்சாமி கேட்கவில்லை.
இதையடுத்து தனது கணவரின் அறிவுரைப்படி லலிதா வேல்சாமிக்கு போன் செய்து தன்னை பார்க்க திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த வேல்சாமி கடந்த 17ம் தேதி திருப்பூர் வர அவரை லலிதாவும், கருப்பசாமியும் சேர்ந்து தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வேல்சாமியை தனது வீட்டிற்கு அருகே வைத்து கருப்பசாமி தனது நண்பர்கள் ஆட்டோ டிரைவர்களான பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (20), காலேஜ் ரோடு அமர்ஜோதி நகரை சேர்ந்த ஜோசப் (33), பி.என்.ரோடு இளங்கோ நகரை சேர்ந்த நவீன்குமார் (19), போயம்பாளையம் அவினாசி நகரை சேர்ந்த லோகநாதன் (20), கருவம்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் (27) ஆகியோருடன் சேர்ந்து தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த வேல்சாமியை சாலையோரம் வீசிவிட்டு சென்றுவிட்டனர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வேல்சாமி இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கருப்பசாமி உள்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications