ஒலிபெருக்கி பாடலால் கலவரம்... வீடுகளுக்குத் தீவைப்பு.. மதுரை அருகே பரபரப்பு
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை என்ற கிராமத்தில் ஒலிபெருக்கியில் போடப்பட்ட பாடல் தொடர்பாக இரு தரப்புக்கு இடையே பெரும் மோதல் வெடித்தது. இதில் குடிசை வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொங்கல் விழா வழக்கத்தை விட உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதேபோல குருவித்துறையிலும் ஊர் மக்களால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு தரப்பினர் ஒலிபெருக்கி வைத்து பாடல்கலை ஒலிபரப்பினர். இதுதொடர்பாக இன்னொரு தரப்புக்கும் இவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதையடுத்து ஒரு தரப்பைச் சேர்ந்த மூன்று பேரைப் பிடித்து மறு தரப்பினர் தாக்கியுள்ளனர். பின்னர் சமூக கூடத்திலும் அடைத்து வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து மூன்று பேரையம் மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தனர்.
இந்த நிலையில் தாக்கப்பட்டவர்கள் தரப்பினர் ஆவேசத்துடன் தாக்குதலில் குதித்தனர். இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. குடிசைகள் சிலவற்றுக்குத் தீவைக்கப்பட்டது. இந்த மோதலில் 3 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டதால் அவரை மதுரைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
நிலைமை மோசமடைந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். மாவட்ட எஸ்.பி. விஜேந்திர பிதாரியும் சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தினர். நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications