Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மா.செ பதவிக்கு முட்டி மோதும் 6 தலைகள்.. “பெரும் குழப்பம்”.. லிஸ்ட்டை பார்த்து அரண்டு போன எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

திருச்சி : அதிமுகவில் காலியாக இருந்து வரும் மாவட்ட செயலாளர் பதவியைப் பெறுவதற்கு 6 பேர் முட்டி மோதி வருகின்றனராம். அண்மையில் கட்சி மாறிய ஒருவரும் பதவியை எதிர்பார்க்கிறாராம். இதனால், யாரை மாவட்ட செயலாளராக நியமிப்பது என்பதில் எடப்பாடி பழனிசாமி குழம்பிப் போயுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்தனர். ஒருசில மா.செக்கள் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் நின்றனர். அவர்களில் ஒருவர் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். வெல்லமண்டி நடராஜன் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

6 leaders including ex minister are fighting for the district secretary post in AIADMK

திருச்சி மாநகர் அதிமுக : ஓபிஎஸ்ஸை வெளியேற்றிய பிறகு தனது ஆதரவாளர்களை அனைத்து பதவிகளுக்கும் நியமித்த எடப்பாடி பழனிசாமி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு யாரையுமே இதுவரை நியமிக்கவில்லை. வெல்லமண்டி நடராஜன் எப்படியும் தன் பக்கம் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையிலேயே காலம் தாழ்த்தினார் ஈபிஎஸ்.

ஆனால், கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகிவிட்ட நிலையில், நீதிமன்றங்களிலும், தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ்ஸுக்கு தொடர்ந்து பின்னடைவுகள் ஏற்பட்டாலும் வெல்லமண்டி நடராஜன் எடப்பாடி பக்கம் தாவவே இல்லை. வெல்லமண்டி நடராஜன் வகித்த திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பதவியைப் பெறுவதில் எடப்பாடி அணியில் பெரும் போட்டியே நடந்து வருகிறது.

மா.செ பதவிக்கு கடும் போட்டி : திருச்சி அதிமுக மாவட்ட மாணவரணிச் செயலாளரும், ஆவின் சேர்மனுமான கார்த்திகேயன், இந்தப் போட்டியில் முன்னணியில் உள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானராக கருதப்படும் கார்த்திகேயன், அதிமுகவில் வைட்டமின் 'ப'வை பெருமளவில் இறக்கி வருபவர். கட்சியில் இளையவராக இருந்தாலும், மா.செ பதவியைப் பிடிக்கும் ரேஸில் முன்னால் நிற்கிறாராம் கார்த்திகேயன்.

அதிமுக மாநில இளைஞரணி இணைச் செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான சீனிவாசனும் மா.செ பதவிக்கான போட்டியில் இருக்கிறார். இவரும் எடப்பாடிக்கு நன்கு அறிமுகமானவர் என்றாலும், அமமுகவுக்கு சென்று திரும்பியவர் என்பதால், லோக்கலில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கின்றனவாம்.

ரேஸில் மாஜி அமைச்சர் : அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவபதியும் மாநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு முட்டி மோதுகிறாராம். எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமானவரான சிவபதி திருச்சி புறநகர் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், மாநகர் மாவட்ட மா.செ பதவி மட்டுமே காலியாக இருப்பதால் அதற்கு சுத்து போடுகிறாராம்.

அதிமுக முன்னாள் எம்.பியான ரத்தினவேல் சீனியரான தனக்கே தலைமை அந்த பொறுப்பைத் தர வேண்டும் என்று கட்சியினர் மத்தியில் பேசி, தலைமைக்கும் தெரியப்படுத்தி இருக்கிறாராம். ஏற்கனவே திருச்சி மாநகர செயலாளராக இருந்த பரமசிவமும் இந்தப் போட்டியில் இருக்கிறாராம்.

தாவிய புள்ளி : இவர்கள் போக, அண்மையில் அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு 'ஜம்ப்' அடித்த முன்னாள் கொறடாவும், முக்கியமான அரசியல் புள்ளியுமான திருச்சி ஆர். மனோகரனும் மாநகர் மா.செ பதவியைக் குறிவைத்துள்ளாராம். அவர் கட்சி மாறியபோதே, மா.செ பதவியை டிமாண்ட் செய்துவிட்டார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

6 leaders including ex minister are fighting for the district secretary post in AIADMK

தற்போது தேர்தல் ஆணையமும், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ள நிலையில், கட்சிப் பணிகளை முழுவீச்சில் செய்ய திட்டமிட்டிருக்கும் எடப்பாடி, காலியாக உள்ள பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டு வருகிறாராம்.

ரேஸில் 6 பேர் : அந்தவகையில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பதவி விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அதிமுகவில் பேசப்பட்டு வரும் சூழலில், அந்தப் பதவிக்கு 6 பேர் தீவிரமாக போட்டி போடுவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதனால், யாரை மாவட்ட செயலாளர் ஆக்கினாலும், மற்றவர்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்பதன் காரணமாக முடிவெடுக்க முடியாமல் குழம்பிப் போய்த் தான் எடப்பாடி பழனிசாமியே இன்னும் சைலண்டாக இருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+