பெண்ணாடம் அருகே 6 வயது சிறுமியை சீரழித்த பட்டதாரி இளைஞர் கைது
6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெண்ணாடம்: விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெண்ணாடம் அருகே நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக பட்டதாரி இளைஞர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்ணாடம் அருகே உள்ள கிராமம் பெரியகொசப்பள்ளம். இங்கு வசித்து வரும் குமரேசன் என்பவர் ஒரு நகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியை குமரேசன் தூக்கி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இது பற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுதபடியே தெரிவித்துள்ளாள். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பெண்ணாடம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் குமரேசனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்படுகிறது. படித்த பட்டதாரியான குமரேசனுக்கு திருமணமாகி, 2 மாத கைக்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications