பெரம்பலூரில் 6 மாதக் குழந்தை நரபலி - ”பகீர்” பூஜை குறித்து விசாரணை தீவிரம்
பெரம்பலூர்: பெரம்பலூரில் மூலிகைச் செடிகள் வளர்க்கும் இடத்தில் குழந்தை ஒன்று நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் மூலிகை செடி வளர்க்கும் பண்ணை உள்ளது. இந்த மூலிகை பண்ணையை பெரம்பலூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நடத்திவருகிறார். இது மலைகள் நிறைந்த பகுதி. மலைகளின் அடிவாரத்தில் பத்து ஏக்கர் நிலத்தில் மூலிகை செடிகளை வளர்த்துவருகிறார். கடந்த சில காலங்காளாகவே இவரது போக்கில் மாற்றம் தெரிந்தது.

இந்நிலையில் குழந்தை ஒன்றினை பலி கொடுத்துள்ளார் அவர். இது தொடர்பாக, கார்த்திகேயன், சித்திக், குலாம்ராசு, ராம்குமார், சலீம், சாதிக் உட்பட ஆறு நபர்களை கைது செய்துள்ளது காவல்துறை. அங்கு நரபலி கொடுக்கப்பட்ட குழந்தை, இந்த பகுதியைச் சேர்ந்ததா இல்லை வேறு பகுதியைச் சேர்ந்ததா என இன்னும் கண்டறியப்படவில்லை.
இது தொடர்பாக, காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது நடந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துகொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications