சென்னை சாப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் ரூ.12 லட்சம் நகைகள் கொள்ளை!
சென்னை: வீடு புகுந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர், ராகவன் மகன், கிருஷ்ணா. இவரது மனைவி ஸ்ரீ வித்யா. இருவருமே சாப்ட்வேர் இன்ஜினீயர்களாகும். இருவரும் சிறுசேரியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று இரவு கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி முதல் தளத்திலும், ராகவன் தரைத்தளத்திலும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் கொள்ளை கும்பல் ஒன்று, ஜன்னல் வழியாக கைவிட்டு கதவை திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளது.
தரைத்தளத்தில் எதுவும் கிடைக்காததால், முதல் தளத்திற்கு கொள்ளையர்கள் சென்றுள்ளனர். அங்குள்ள கபோர்ட் திறந்த நிலையிலேயே இருந்துள்ளது. அதற்குள் இருந்த, வைர நெக்லஸ், வைரத் தோடு உள்பட 60 சவரன் நகைகளை கொள்ளையர்கள் அபேஸ் செய்தனர். ரூ.1 லட்சம் ரொக்கம், அரைக்கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப்பும் திருடப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சமாகும். இன்றுகாலை விழித்து பார்த்தபோதுதான், கொள்ளை சம்பவம் பற்றி கிருஷ்ணாவின் குடும்பத்தாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications