சட்டசபைத் தேர்தல்: முதல்நாளில் 4 பெண்கள் உட்பட 62 பேர் மனு தாக்கல்
சென்னை: தமிழக முழுவதும் முதல் நாளில் 4 பெண்கள் உள்பட 62 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் முதல் நாளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியில் மே மாதம் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.

முதல்நாளான இன்று திமுக வேட்பாளர்கள் சிலர் மனு தாக்கல் செய்துள்ளனர். பாளை தொகுதி வேட்பாளர் மைதீன்கான் முதல்நாளே மனு தாக்கல் செய்தார். ஈரோடு முத்துசாமியும் இன்றே மனு தாக்கல் செய்தார்.
சங்கரன்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அன்புமணி, தேர்தல் நடத்தும் அலுவலர் ராமசுப்ரமணியனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், வங்கி விடுமுறை நாள்களான இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வேட்புமனுக்களை பெறுவது குறித்து கேரளாவைச் சேர்ந்த தலைமை தேர்தல் ஆணையர், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்துக்கு விளக்கும் அளித்து தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள பதில் மனுவில், வங்கி விடுமுறை நாள்களில் வேட்புமனுக்கள் பெறவேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது. இந்த அறிவுரை பொதுத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் நான்காவது சனிக்கிழமையான நாளை வேட்புமனுக்கள் பெறப்பட மாட்டாது என தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
முதல்நாளான நேற்று 4 பெண்கள் உட்பட 62 பேர் மனுதாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் முதல் நாளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications