நெடுவாசல் போராட்டத்தில் ஒப்பாரி வைத்து போராடி மூதாட்டி மரணம்
நெடுவாசல் ஒப்பாரி போராட்டத்தில் பங்கேற்ற பொன்னம்மாள் என்ற மூதாட்டி மயங்கிவிழுந்து மரணம் அடைந்தார்.
புதுக்கோட்டை: நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெறும் 21-வது நாள் போராட்டத்தின் போது 60 வயது மதிக்கத்தக்க பொன்னம்மாள் என்ற பெண் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து 21வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நெடுவாசலை சுற்றியுள்ள கிராம மக்கள் அணியணியாக சென்று போராட்டத்தில் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய அமைப்பினரும், விவசாயிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் இந்தப் போராட்டத்தை ஆதரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நெடுவாசலில் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகாட்டில் கும்மிப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல், கோலாட்டம் உள்ளிட்ட கலைகளோடு போராட்டம் நடைபெற்றது.
அதேபோல் நல்லாண்டர்கொல்லையில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு அருகே அப்பகுதி பெண்கள் கூடி ஒப்பாரி போராட்டம் நடத்தினர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொன்னம்மாள் (65) என்ற மூதாட்டியும் கலந்துகொண்டார். இந்த ஒப்பாரி போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய பொன்னம்மாள் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு இறந்தார். இதையடுத்து, அவருக்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்தச் சம்பவம் நெடுவாசல் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications