கட்டுப்பாட்டை இழந்த ஆடி கார்.. கோவையில் கோர சாலை விபத்து.. 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி
கோவையில் கோரமான நிலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகிவிட்டனர்.
Recommended Video

கோவை: கோவையில் நடந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பலியான சோக சம்பவம் நடைபெற்றது.
கோவை சுந்தராபுரம் பகுதியில் 4 வழிச் சாலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாணவர்களும், பொதுமக்களும் பஸ்ஸுக்காக பெரியார் பல் நிலையத்தில் காத்திருந்தனர். இதன் அருகிலேயே ஆட்டோ ஸ்டாண்டும் உள்ளது. அப்போது அவ்வழியாக பொள்ளாச்சியில் இருந்து கோவையை நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.
அந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் திடீரென சாலையோரத்தில் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் அங்கிருந்த மின்கம்பம் சேதமடைந்தது. மேலும் பூக்கடை மீதும் மோதியது.

6 பேர் பலி
இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த டிரைவர் மற்றும் 3 பயணிகளும், சாலையோரம் நின்றிருந்த கல்லூரி மாணவி உள்பட 6 பேர் பலியாகிவிட்டனர். மேலும் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேகமாக கார் ஓட்டிய ஓட்டுநர்
இந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களும் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சொகுசு காரை ஓட்டிய டிரைவர் ஜெகதீசனை போலீஸார் கைது செய்தனர்.

ரத்த மாதிரிகள்
கோவையில் கல்வி குழும உரிமையாளரை பிக்அப் செய்ய காரை வேகமாக ஓட்டிச் சென்றதால்தான் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. எனினும் இவர் குடிபோதையில் இருந்தாரா என்பதை கண்டறிய இவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஆட்சியர் ஆய்வு
இந்நிலையில் விபத்தில் இறந்தவர்கள் சோமு (55), சுரேஷ் (43), அம்சவேணி (30), சுபாஷினி (20), ஸ்ரீரங்கதாஸ் (75) மற்றும் குப்பம்மாள் (60) ஆகியோர் ஆவர். இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனும் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications