சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து - பட்டாசு தயாரித்த 70 வயது மூதாட்டி கருகி பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த தீவிபத்தில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாமிநத்தம் விலக்கு என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு இன்று சுப்பம்மாள் என்ற 70 வயது பாட்டி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் இருந்த அறையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசுகள் சரமாரியாக வெடித்துச் சிதறின. இதில் சிக்கி சுப்பம்மாள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த அறையும் பட்டாசுகள் வெ்டித்ததில் சிதறிப்போய் விட்டது.
இந்த சம்பவம் குறித்து மல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications