சுதந்திர தினவிழா கோலாகலம்.... அறிவாலயம், கமலாலயம் உள்ளிட்ட கட்சி அலுவலகங்களில் கொடியேற்றம்!
சென்னை: நாட்டின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில்அரசியல் கட்சிகளின் சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
இந்தியா முழுவதும் இன்று 70-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் தங்களது தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
தமிழக அரசின் சார்பில் நாட்டின் 70-வது சுதந்திர தின விழா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக
இன்று காலை திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் திமுகவின் துணைப் பொதுச் செயலர் வி.பி.துரைசாமி கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இதில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தேமுதிக தலைமைக் கழகம்
சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் தேமுதிக விஜயகாந்த் தேசியக்கொடியேற்றி வைத்தார். அப்போது, மாணவர்களுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி, அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

பாஜக தலைமை அலுவலகம்
தமிழ்நாடு பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ.க பொதுச் செயலாளர் ராம் மாதவ் கொடியேற்றினார். இதில், மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில், தேசிய கொடியை சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யா ஏற்றி வைத்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications