லோக்சபா தேர்தல் 2014: வேட்புமனு தாக்கல் முடிந்தது... ஏப்ரல் 9ல் இறுதி வேட்பாளர் பட்டியல்
சென்னை: தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிந்தது
தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இன்று பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வெள்ளிக்கிழமை மாலை வரை 68 பெண்கள் உள்பட 758 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். முதல் நாள், 67 பேரும் இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்ததும் மறுநாள், 131 பேரும் மனு தாக்கல் செய்தனர். கடந்த 2ம் தேதிஅன்று 120 பேரும் , நேற்றுமுன்தினம், 139 பேரும் மனு தாக்கல் செய்தனர். வெள்ளிக்கிழமை மட்டும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என 301 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல்
ஆலந்தூர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 7 பேர் மனு செய்துள்ளனர்' என தெரிவித்துள்ளார். . இதையடுத்து மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 7-ம் தேதி நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 9-ம் தேதி ஆகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
புதிய வாக்காளர் பட்டியல்
தொடர்ந்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கூறியுள்ளதாவது:
இன்னும் 2 நாட்களில் புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களின் பெயர்களுடனான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், புதிதாக விண்ணப்பித்தவர்களில் 10 சதவீதம் வனாக்காளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், 19 தொகுதிகளின் தேர்தல் மேற்பார்வையாளர்கள் இன்று தமிழகம் வருவார்கள் எனவும், 20,000 ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், பதற்றம் நிறைந்த பகுதிகளின் பாதுகாப்பிற்காக துணை ராணுவ படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் அழைக்கப்படுவார்கள் எனவும் பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
பணம் பெறாமல் வாக்காளர்கள் ஓட்டளிக்க மாணவர்களும், பொது மக்களும் பிரசாரம் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications