இலங்கை கடற்படை அராஜகம்! மண்டபம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தது.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 4 ஆம் தேதி 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் இன்னலுக்குள்ளாகியுள்ள அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்படி படகுகளை மீட்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் விசைப் படகு மீனவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் செய்தனர்.
இந்த நிலையில் ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மண்டபம் வடக்கு மீன்பிடித் துறைமுக மீனவர்களை நெடுஞ்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
2 விசைப்படகுகளுடன் கைதான மீனவர்கள் காங்கேசன் துறைமுக முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பது வாடிக்கையாகி வரும் நிலையில் இது குறித்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications