நெல்லை, தூத்துக்குடியில் 8 நீதிபதிகள் இடமாற்றம்
தூத்துக்குடி: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் 8 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள் 58 பேருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி, மற்றும் குமரி மாவட்ட நீதிபதிகள் 6 பேர் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் 72 நீதிபதிகளுக்கு பதவு உயர்வும், பணியிட மாறுதலும் அளிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நீதிபதிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி சிறப்பு சார்பு நீதிபதி சாந்தி செழியன் தஞ்சை முதன்மை சார்பு நீதிபதியாகவும், தென்காசி கூடுதல் சார்பு நீதிபதி பாலகுமார் பொள்ளாச்சி சார்பு நீதிபதியாகவும், தென்காசி முதன்மை சார்பு நீதிபதி மணிவண்ணன் பட்டுகோட்டை முதன்மை சார்பு நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காலியாக இருந்த தலைமை குற்றவியல் நீதிபதி பதவிக்கு புதுக்கோட்டை சார்பு நீதிபதி தனியாக மாற்றப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலில் கூடுதல் சார்பு நீதிபதியாக பணியாற்றி வந்த ராஜூ நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிபதியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் தூத்துக்குடியில் காலியாக இருந்த தலைமை குற்றவியில் நீதிபதி பதவிக்கு சேலம் மாநகராட்சி வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவர் சீத்தாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தூத்துக்குடி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் அப்துல் மாலிக் சென்னை 17வது சிட்டி சிவில் கோர்ட் நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இந்த மாற்றத்துக்கான உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் கலையரசன் பிறப்பித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications