சட்டசபை தேர்தல்: அதிமுகவில் சீட் வாங்கித் தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி- 8 பேர் கைது
மன்னார்குடி: ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தம்பி திவாகரன் மூலமாக சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிமுகவில் சீட் வாங்கித்தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த பெண் உள்ளிட்ட 8 பேரை மன்னார்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. தேர்தலில் போட்டியிட எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்றும், எத்தனை லட்சம் செலவழித்தாவது எம்.எல்.ஏ வேட்பாளராகிவிடவேண்டும் என்றும் அதிமுகவினர் முயற்சி செய்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் ஆயிஷா, அதிமுகவை சேர்ந்த பல அமைச்சர்களை தனக்கு தெரியும் என்று கூறி வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்தவர். இவரிடம் தனது உறவினர் ஒருவரின் வேலைக்காக திருச்சியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் என்பவர் சரவணன் பணம் கொடுத்து ஏமாந்திருந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தம்பி திவாகரனிடம் சொல்லி, வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுகவில் எம்.எல்.ஏ சீட் வாங்கித்தருவதாக பலரிடம் ஆயிஷா கூறி பணம் வசூலித்துள்ளார். இதுபற்றி தகவலறிந்து சரவணன் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கார்த்தியை, ஆயிஷாவிடம் அனுப்பி எம்எல்ஏ சீட் வாங்கி தரும்படி கேட்கவைத்துள்ளார். அவரிடம் ஆயிஷா எம்.எல்.ஏ சீட்டுக்கு ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். இதற்கு சம்மதித்து கார்த்தி ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்தார்.
இதுபற்றி கார்த்தியும், சரவணனும் திவாகரனுக்கு தெரிவித்தனர். அவரது யோசனையின்படி மீதி பணத்தை திவாகரனின் சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டையில் ஆயிஷாவிடம் தருவது என்று முடிவு செய்யப்பட்டது. உடனே திவாகரனின் வீடு முன்பு ஏதாவது பொய் சொல்லி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என நினைத்து ஆயிஷாவும், அவருடன் சிலரும் 3 காரில் நேற்று மாலை சுந்தரக்கோட்டை வந்தனர்.
சுந்தரக்கோட்டையில் உள்ள கல்லூரி அருகே திவாகரனின் ஆதரவாளர்கள், 3 காரையும் மடக்கி அதில் இருந்த ஆயிஷா, சென்னை வடபழனியை சேர்ந்த சேகர், பிரசாத்குமார் மற்றும் சவுந்தரராஜன் உள்ளிட்ட 8 பேரை பிடித்து மன்னார்குடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதிமுகவில் சீட் வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications