தொடர்கதையாகி வரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்... ஒரே நாளில் 16 மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேரை ஒரே நாள் இரவில் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கோடியக்கரை/ராமேஸ்வரம்: பாரம்பரிய மீன்பிடி உரிமையுள்ள பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளது.
வங்க கடலில் ஒரு படகில் 8 மீனவர்கள்இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கைது செய்தனர். பின்னர் அவர்களது படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் 8 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 ராமேஸ்வரம் மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரும் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஒரே நாள் இரவில் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாள்களுக்கு முன்பு தமிழக எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பிரிட்ஜோ என்ற மீனவரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசு உறுதியளித்த நிலையில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் தொடருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications