டிரைவருடன் காரைக் கடத்தி ரூ.80 லட்சம் டாஸ்மாக் வசூல் பணம் கொள்ளை - சென்னையில் துணிகரம்
சென்னை: சென்னையில் கார் ஒன்றை அதன் ஓட்டுநருடன் கடத்தி 80 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கடற்கரை சாலையில் உள்ள 25 டாஸ்மாக் மதுபானக் கடைகளின் வருமான வசூல் தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. நேற்று அந்த கடைகளில் வசூலித்த பணத்தை காரில் எடுத்து வரும்போது, மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து பறித்துச் சென்றதாக அந்த நிறுவன ஊழியர்கள் 3 பேர் நீலாங்கரை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

நீலாங்கரையை அடுத்த அக்கரைபகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குள் வசூலுக்காக தாங்கள் சென்றபோது, காருக்குள் 80 லட்சம் ரூபாய் வசூல் பணத்துடன் இருந்த டிரைவரை மர்ம நபர்கள் தாக்கி மயக்கமடையச் செய்து விட்டு, காரை சிறிது தூரம் ஓட்டிச் சென்று பணத்தை கொள்ளையத்துச் சென்றுவிட்டதாக மற்ற இரண்டு ஊழியர்கள் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர்.
காரில் இருந்த கைரேகையை பதிந்த போலீசார், பணம் வசூல் செய்யும் 3 ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் நடந்த இந்த துணிகர சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications