தமிழகத்தில் வேலைக்கு காத்திருப்போர் எண்ணிக்கை 84 லட்சம் – “ஷாக்” தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கிட்டத்தட்ட 84 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப நாளுக்கு நாள் வேலையில்லா திண்டாட்டம் என்பது வெகுவாக அதிகரித்து வருகிறது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை, அதன் புள்ளி விவரங்களை பார்த்தாலே வயிற்றில் புளியைக் கரைக்கின்றது.

 அதிகரிக்கும் எண்ணிக்கை:

அதிகரிக்கும் எண்ணிக்கை:

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றது. மூன்று ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் பதிவையும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பித்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பு பதிவு:

வேலைவாய்ப்பு பதிவு:

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 2009 ஆம் ஆண்டு 11 லட்சத்து 96 ஆயிரத்து 982 பேர் பெயரினை பதிவு செய்து இருந்தனர். இது கடந்த 4 ஆண்டுகளில் பல மடங்காக அதிகரித்துள்ளது.

பெண்களும் அதிகம்:

பெண்களும் அதிகம்:

அதாவது, 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 84 லட்சத்து 38 ஆயிரத்து 439 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 43 லட்சத்து 12 ஆயிரத்து 510 பேர் பெண்கள் ஆவர்.

இளங்கலைப் பட்டதாரிகள்:

இளங்கலைப் பட்டதாரிகள்:

இளங்கலை பொறியியல்- 2,12,656 பேர், மருத்துவம்- 8720 பேர், வேளாண்மை கல்வியியல் - 3747 பேர், கால்நடை மருத்துவம்- 1877 பேர், இளங்கலை சட்டம்- 2796 பேரும் அடங்குவர்.

 முதுகலை பட்டதாரிகள்:

முதுகலை பட்டதாரிகள்:

முதுகலைப் பட்டப்படிப்பில் பொறியியல்- 31,168, மருத்துவம் 371, வேளாண்மை கல்வியியல்- 858, கால்நடை மருத்துவம்- 89 , சட்டம்- 321 பேர் அடங்குவர்.

வாய்வார்த்தை மட்டும் போதுமா?:

வாய்வார்த்தை மட்டும் போதுமா?:

என்னதான் வளர்ச்சி என்று மத்திய அரசும், மாநில அரசும் காட்டுக்கூச்சல் போட்டாலும், இடைத்தரகர்களாய் செயல்படும் சில அரசியல்வாதிகளால் தகுதி உடையவர்கள் இன்னும் வேலைக்காக காத்துக் கிடப்பதுதான் நிதர்சனமான உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+