Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

845 கிலோ போதைப்பொருள் அழிப்பு ‘கடந்த ஆண்டை விட 10 மடங்கு அதிகம்’- சென்னை போலீஸ் கமிஷனர் சொன்ன தகவல்!

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு : சென்னையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 845 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் அழிக்கப்பட்டன.

தமிழகத்தில், தடைசெய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் அதன் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில், காவல்துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுவதைத் தடுக்கும் வகையில், தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, கடத்தல்காரர்களை கையும், களவுமாக போலீசார் பிடித்து வருகின்றனர்.

845 கிலோ கஞ்சா அழிப்பு

845 கிலோ கஞ்சா அழிப்பு

இந்நிலையில், சென்னையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 845 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அருகிலுள்ள தென்மேல்பாக்கம் என்ற இடத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் முன்னிலையில், சென்னை பெருநகர காவல்துறையினரால் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான 57 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 831 கிலோ கஞ்சா மற்றும் 14 கிலோ கெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு 1 கோடியே 50 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

57 வழக்குகளில் பறிமுதல்

57 வழக்குகளில் பறிமுதல்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது: 57 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 845 கிலோ கஞ்சா மற்றும் போதை பொருள்கள், நீதிமன்ற உத்தரவின்படி இங்கு அழிக்கப்பட்டது. மேலும், 700 கிலோ போதை பொருட்கள் நீதிமன்ற உத்தவுக்குப் பின் அழிக்கப்பட உள்ளது. மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 592 வழக்குகளில் 908 பேர் கைது செய்யப்பட்டு 1,526 கிலோ கஞ்சா மற்றும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதை மாத்திரைகள் பறிமுதல்

போதை மாத்திரைகள் பறிமுதல்

அதுமட்டுமின்றி போதை மாத்திரைகள் தொடர்பான 24 வழக்குகளில், 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 42,000-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 மடங்கு அதிகம். இதுவரை 4.87 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, 2.88 கோடி ரூபாய் மதிப்புள்ள கெட்டமைன், 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வங்கிக் கணக்குகள் முடக்கம்

வங்கிக் கணக்குகள் முடக்கம்

இந்த ஆண்டில் 350 பேரின் வங்கி கணக்கில் முடக்கப்பட்டு அதன் மூலம் அவர்கள் எளிதில் அடையாளம் காணப்படுவதுடன், அவர்கள் வேறு வங்கி கணக்கு தொடங்குவதற்கு தடையாக அமையும் என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, வடக்கு மண்டல இணைய ஆணையர் ரம்யா பாரதி, மத்திய குற்றபிரிவு துணை ஆணையர் நாகஜோதி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+