Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமனார் ரொம்ப மோசம்.. ஊரெல்லாம் "கசமுசா" கணவன்.. பரிதாப மருமகள்.. 4 மணி நேரத்தில் அந்த சிசு.. ஹய்யோ

9 மாத கர்ப்பிணி ஒருவர் வரதட்சணை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்காதல்களும், தவறான உறவுமுறைகளும், தனிமனித ஒழுக்கக்கேடுகளும், ஏராளமான அப்பாவி உயிர்களை பறித்துவிடுகின்றன.. அப்படித்தான் ஐஸ்வர்யாவின் உயிர் பிரிந்துள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா நல்லூர் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்.. இவரது மகள் ஐஸ்வர்யா.. 22 வயதாகிறது.. இவரும், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள நீலமங்கலம் புதுகாலனி பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்..

புருஷோத்தமானுக்கு இப்போது 23 வயதாகிறது.. ஆனால், 2018-ம் ஆண்டு, இவர்கள் இருவருமே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.. அப்படியானால், புருஷோத்தமனுக்கு அப்போது வயது 19தான் ஆகியிருக்கும் போல.

 9 மாத கர்ப்பம்

9 மாத கர்ப்பம்

இந்த தம்பதியினருக்கு 2வயதில் ரட்சிதா என்ற பெண் குழந்தை உள்ளது... இப்போது ஐஸ்வர்யா மறுபடியும் கர்ப்பமாக இருக்கிறார்.. 9 மாத கர்ப்பிணி.. புருஷோத்தமன் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருபவராம்.. அந்த வகையில், மேளம் அடிப்பதற்காக வெளியூருக்கு அடிக்கடி செல்ல நேர்ந்துள்ளது. அப்படி வெளியூர்களுக்கு செல்லும்போதெல்லாம் நிறைய பெண்களுடன் பழக்கமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.. இந்த விஷயம் ஐஸ்வர்யாவுக்கு தெரிந்து, புருஷோத்தமனை தட்டிக்கேட்டுள்ளார்..

 எக்கச்சக்க பெண்கள்

எக்கச்சக்க பெண்கள்

இதற்கு பிறகுதான் வீட்டில் பிரச்சனையே வெடித்துள்ளது.. கணவர் புருஷோத்தமன், மாமனார் பழனிவேல் 2 பேரும் சேர்ந்து ஐஸ்வர்யாவிடம் வரதட்சணை பிரச்சனையை கிளப்பி உள்ளனர்.. இது தொடர்பாக நிறைய துன்புறுத்தல்கள் நடந்துள்ளது.. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறும் வந்து போயுள்ளது. இந்நிலையில், தீபாவளியன்று புருஷோத்தமன் வெளியே சென்றுவிட்டு, அன்றைய தினம் நைட், லேட்டாக வந்துள்ளார்.. பண்டிகை நாள் அதுவும் வீட்டில் ஏன் இல்லை? லேட்டாக ஏன் வருகிறீர்கள்? என்று ஐஸ்வர்யா கேட்டதாக தெரிகிறது..

டார்ச்சர்

டார்ச்சர்

உடனே தகராறு வெடித்துள்ளது.. மறுபடியும் வரதட்ணை பிரச்சனை தலைதூக்கி உள்ளது.. உடனடியாக வரதட்சணை பணம் வாங்கி வரசொல்லி புருஷோத்தமன் டார்ச்சர் தந்துள்ளார்.. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா, தீபாவளி நாளன்றே, அந்த கூரைவீட்டில் தூக்குபோட்டு தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால், அதற்குள் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஐஸ்வர்யாவை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து, பிறகு மேல் சிகிச்சைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்...

 ஸ்பாட் டெத்

ஸ்பாட் டெத்

அங்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டும், பலனின்றி 9 மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்துவிட்டார்.. இதையடுத்து, அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்ற டாக்டர்கள் முனைந்தனர்.. உடனடியாக சடலமாக கிடந்த ஐஸ்வர்யாவுக்கு ஆபரேஷனும் நடந்தது.. வயிற்றில் இருந்து பெண் குழந்தையை வெளியே எடுத்தனர்... ஆனால் அந்த பெண் குழந்தையும் சிகிச்சை பலனின்றி அடுத்த 4 மணி நேரத்திற்கு பிறகு மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. இதற்கு பிறகுதான், ஐஸ்வர்யாவின் அம்மா, அம்சவள்ளி தன்னுடைய மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கள்ளக்குறிச்சி போலீசில் புகார் தந்துள்ளார்.

 உறவு + முறிவு

உறவு + முறிவு

இறுதியில், புருஷோத்தமன், மாமனார் பழனிவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர்... எப்போதுமே, கணவரை விட, மாமனார்தான் ஐஸ்வர்யாவை நிறைய துன்புறுத்தி வந்தாராம்.. புருஷோத்தமன் வீட்டில் இல்லை என்றாலே, ஐஸ்வர்யாவிடம், வீட்டிலிருந்து நகை பணம் வாங்கி வா என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்துவிடுவாராம்.. ஐஸ்வர்யா இதுகுறித்து புருஷோத்தமனிடம் பலமுறை சொல்லியும், அதை அவர் காதிலேயே வாங்கி கொள்ளவில்லையாம்.. நிறைய பெண்களிடம் தொடர்பில் இருக்க வேண்டாம் என்று கணவனுக்கு அறிவுரை சொல்லவும்தான், ஐஸ்வர்யாவை அடித்து நொறுக்க ஆரம்பித்தாராம் புருஷோத்தமன்.. இப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+