சென்னையில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 32 வயது லோடு ஆட்டோ டிரைவர்
சென்னை: சென்னையில் 9 வயது சிறுமியை 32 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாலையோரத்தில் அவரை போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் கதிரேசன். கூலித் தொழிலாளி. அவரது மனைவி ரோஜா. பழக்கடை வைத்து நடத்துகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோஜா தனது அம்மா சகுந்தலாவை கடையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீட்டில் இருந்துவிட்டார். பள்ளி விடுமுறை என்பதால் ரோஜாவின் 9 வயது மகள் பாட்டியுடன் கடைக்கு சென்றார்.
மதியம் 3 மணி அளவில் சுரஷே் என்ற லோடு ஆட்டோ டிரைவர் கடைக்கு வந்து சிறுமியிடம் பேசியுள்ளார். பொம்மை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி அவருடன் செல்லட்டுமா என்று பாட்டியிடம் கேட்டுள்ளார். ஆனால் பாட்டி வியாபாரத்தில் பிசியாக இருந்ததால் கவனிக்கவில்லை.
இதனால் சிறுமி சுரேஷுடன் ஆட்டோவில் சென்றார். சுரேஷ் சிறுமியை செம்மன்சேரிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாலையோரத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டார். சாலையோரத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு சிறுமி கிடப்பதை பார்த்த பொதுமக்கள் நடந்ததை விசாரித்து சிறுமியை அவரது தாயிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து அன்று இரவே சுரேஷை கைது செய்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications