எங்களுடன் 98% அதிமுக நிர்வாகிகள் உள்ளனர்.. அமைச்சர் சிவி சண்முகம்
அதிமுகவில் 98% நிர்வாகிகள் தங்களுடன் உள்ளதாக அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவில் 98% நிர்வாகிகள் தங்களுடன் உள்ளதாக அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் தரப்பினர் கட்சி மற்றும் சின்னத்தை மீட்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நேற்று கூடுதல் ஆவணங்களை சமர்ப்பித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், அதிமுகவில் 98% நிர்வாகிகள் தங்களுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க உள்ளதாக அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார். 5.12.2016 தேதியின்படி இருந்த நிர்வாகிகளின் பட்டியல் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியின்படி பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்களின் பட்டியலை அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
கட்சி மற்றும சின்னத்தை விரைவில் மீட்போம் என்றும் அமைச்சர் சிவி சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications