மாமல்லபுரத்தில்.. ஜெர்மனி பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் பலாத்காரம்!
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஜெர்மனி நாட்டு பெண் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஜெர்மனி நாட்டு பெண் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிறப்பு குழு அமைத்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரத்துக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் பல்லவர்கள் கால சிற்பத்தையும் மாமல்லபுரத்தின் கடற்கரை அழகையும் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெர்மனைச் சேர்ந்த 5 பேர் சனிக்கிழமை மாமல்லபுரம் வந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.

சவுக்கு தோப்புக்கு தூக்கிச்சென்று..
அந்தச் சுற்றுலா பயணிகளில் ஒருவரான இளம் பெண், நேற்று காலை பீச்சில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, அவரை அருகில் உள்ள சவுக்குத் தோப்புக்கு தூக்கிச்சென்றுள்ளது.

மாறி மாறி பலாத்காரம்
பின்னர் அந்த கும்பல் ஜெர்மனி நாட்டுப் பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் போலீசில் புகார் அளித்தார்.

ஜெர்மன் தூதரகத்துக்கு தகவல்
மேலும் ஜெர்மன் தூதரகத்துக்கும் தான் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

4 தனிப்படைகள் அமைப்பு
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் 4 தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கத்திமுனையில் பலாத்காரம்-அதிர்ச்சி
பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சென்ற போலீசார் சம்பவம் நடந்ததாக கூறப்படும் பட்டிபுலம் பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த ஜெர்மனி பெண் ஒருவர் கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications