சென்னை சுகப்பிரியா.. காதலன் வீட்டின் முன் செய்த தரமான சம்பவம்.. மயிலாடுதுறையே மலைத்து போச்சு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே செங்குடி கிராமத்தை சேர்ந்த பொன்னையன் என்பவருடைய மகள் சுகப்பிரியா. இவருக்கு 26 வயது ஆகிறது. இவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே செங்குடி கிராமத்தை சேர்ந்த பொன்னையன் என்பவருடை மகள் சுகப்பிரியா. இவருக்கு 26 வயது ஆகிறது. இவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சுகப்பிரியாவும், அதே செங்குடி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவர் மகன் வினோத்தும் (வயது 29) காதலித்து வந்தார்களாம். சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வரும் வினோத், சுகப்பிரியாவை 7 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம். இதனிடையே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சுகப்பிரியாவை, வினோத் 2 முறை கர்ப்பமாக்கியதாகவும், ஆனால் 2 முறையும் கருக்கலைப்பு செய்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்தநிலையில் வினோத் தன்னை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய சுகப்பிரியா, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுபற்றி புகார் செய்தார்.
ஆனால் புகார் கூறி 56 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கொந்தளித்த சுகப்பிரியா, நேற்று காலை வினோத் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர், வீட்டில் யாரும் இல்லாதததை கண்டுள்ளார். அங்கு கதவு பூட்டப்பட்டு இருந்ததை கண்டு ஏமாற்றம் அடைந்தார்.
இதனிடையே தங்கள் வீட்டின் வாசல் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றதாக பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் சுகப்பிரியா மீது வினோத் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இருதரப்பு புகாரின் பேரில் விசாரணை நடந்த நிலையில், இறுதியாக சுகப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் வினோத்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications