ஆரல்வாய்மொழியில் சோகம்.. பைக்கில் சென்ற புது மாப்பிள்ளை கார் மோதி பரிதாப பலி
பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளை மீது கார் மோதியதில் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி: பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளை மீது கார் ஒன்று எதிர்பாராமல் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுரு. 27 வயதான ராஜகுருக்கு கடந்த 18 நாட்களுக்கு முன்புதான் மெர்லின்ஷீபா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 2 நாட்களுக்கு முன்பு மனைவி தனது பெற்றோரை பார்க்க பூலாங்குழி சென்றிருந்தார். இதனால் மனைவியை பார்க்க புதுமாப்பிள்ளை ராஜகுரு நேற்று தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

தாழக்குடி அவ்வையார் அம்மன் கோயிலின் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த கார் ராஜகுரு மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜகுரு உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் ராஜகுருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் முடிந்து 18 நாட்களே ஆன ராஜகுருவின் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்நிலையில், ராஜகுருவின் மீது காரில் மோதி உயிரிழப்பை ஏற்படுத்தியவரை கைது செய்யக் கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரல்வாய்மொழி காவல்நிலையம் முன்பு அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, போலீசார் விபத்து ஏற்படுத்தியவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications