கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி! கார் டயர் வெடித்து கவிழ்ந்த கார்.. சார் ஆட்சியர் சம்பவ இடத்திலேயே பலி
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட சங்கராபுரம் அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த சார் ஆட்சியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி பிரிவு ஆட்சியராக, சார் ஆட்சியர் ராஜாமணி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சங்கராபுரத்தில் ஆய்வு பணி செய்வதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து அவருடைய அரசாங்க காரில் ராஜாமணி மற்றும் அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர்.

சங்கராபுரத்தில் நெருங்கியபோது திடீரென காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சார் ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவருடன் பயணம் செய்த 5 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் ராஜாமணியின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சார்ஆட்சியர் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications