கிழக்கு கடற்கரை சாலையில் நின்ற காரில் திடீர் தீ... பெண் உள்பட 3 பேர் உடல் கருகி பலி
காஞ்சிபுரம் மாவட்டம் மணமை கிராமத்தில் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.
காஞ்சிபுரம்: மாமல்லபுரம் அடுத்த மணமை கிராமத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த காரில் திடீரென தீ பிடித்தது. இதில் காரில் இருந்த ஒரு பெண் உள்பட 3 பேர் உடல் கருகி பலியாகினர்.
கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அடுத்த மணமை என்ற இடத்தில் கார் ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்தது. திடீரென அந்த காரில் தீ பிடித்து எரிந்தது. அப்போது காரில் இருந்த 3 பேரும் வெளியே வரமுடியாமல் தீயில் சிக்கிக் கொண்டார்.

மணமை கிராம மக்கள் தீயை அணைக்க முயன்றனர். காரில் இருந்த நபர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து கார் கொளுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் திருக்கழுக்குன்றம் தீ அணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் கார் தீயை அணைத்தனர்.
இதில் பெண் ஒருவர் உள்பட 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த காருக்கு யாராவது தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவால் தீப்பற்றியதா என்பது குறித்து சதுரங்கபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான மூவரும் குரோம்பேட்டையை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications