குன்னூரில் செம புகையுடன் 200 மீட்டர் தூரத்திலிருந்து பறந்து விழுந்த கார்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
ஊட்டி: உதகையில் சினிமா படப்பிடிப்பில் தேயிலை தோட்டத்தில் 200 மீட்டர் உயரம் பறந்து விழுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்பட சூட்டிங் களைகட்டியுள்ளது. தற்போது உதகை, குன்னூர், கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்கள் ஷூட்டிங் படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உதகை அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நாகார்ஜுன் நடிக்கும் தெலுங்கு படம் சூட்டிங் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

தேயிலைத் தோட்டம்
இந்நிலையில் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சப்தத்துடன் கார் பறந்து வந்து விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

200 மீட்டர் உயரம்
சுமார் 200 மீட்டர் உயரம் வரை பறந்து வந்தது. புகையை, தூசியை கிளப்பி வந்ததால் தேயிலை தொழிலாளர்கள் தலை தெறிக்க ஓடினர். ஏதாவது விபத்து நடந்து விட்டதா என அஞ்சினர். பின்னர் காருக்கு அருகே சென்று பார்த்தனர். அந்த காரில் யாரும் இல்லை. சிறிது நேரத்திற்கு அச்சத்துடனேயே நின்றிருந்தனர்.

திரைப்பட சூட்டிங்
சிறிது நேரத்தில் கார் பறந்து வந்த காட்சி திரைப்பட சூட்டிங் சண்டைக் காட்சிகளுக்காக பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதை தொடர்ந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு வேளை கார் பறந்து வந்த போது அந்த இடத்தில் யாரேனும் பணியாற்றிக் கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதே இந்த வீடியோவை பார்ப்போரின் கேள்வியாக உள்ளது. மேலும் சில பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு வேளை மக்கள் யாரேனும் அந்த டீ எஸ்டேட்டை சுற்றி பார்க்க போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதும் கேள்வியாக உள்ளது.

எச்சரிக்கை
ஒரு வேளை சினிமா ஷூட்டிங் என எஸ்டேட் நிர்வாகத்திடம் சொல்லியும் அதை தொழிலாளர்களுக்கு அவர்கள் சொல்லவில்லையா என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இன்று தேயிலை தொழிலாளர்களுக்கு நல்ல நேரம் என்பதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் போனது. இந்த சண்டை காட்சி நாகார்ஜுனாவின் படத்திற்காக நடந்ததாகவே சொல்லப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications