"திருடா.. திருடி|.. எவர்சில்வர் பாத்திரம் திருடிய பா. பாட்டி... சில்வர் பாத்திரம் திருடிய சீ. தாத்தா
கமல் படத்தில் பார்வதி பாட்டி தைரியமாக திருடியது போல் நிஜ வாழ்க்கையில் சில்வர் பாத்திரங்களை திருடியவர் சீனுவாசன் தாத்தா.
சென்னை: கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பார்வதி பாட்டி கிடைத்த பொருள்களை திருடுவது போல் நிஜத்தில் வெள்ளி, தங்கமாக பார்த்து திருடிய சீனுவாசன் தாத்தா.
சில்வர் சீனுவாசன் என்ற 80 வயது தாத்தா. இவர் இந்த வயதிலும் பெண்களை ஏமாற்றி தங்க நகைகளை கொள்ளையடித்து வந்தார். சுமார் 50 ஆண்டுகளாக இந்த தொழிலில் பட்டைய கிளப்பிய தாத்தா இன்று ஒரு திருட்டில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டார்.

திருடர்கள் தங்களுக்கென ஒரு வழிமுறையை ஏற்படுத்திக் கொண்டு திருடுவது வழக்கம். அதுபோல் இந்த தாத்தாவும் ஜோதிடம், பரிகாரம், திருஷ்டி கழிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு பின்னர் திருடுவதுதான் தாத்தாவின் ஸ்டைல்.
சீனுவாசன் வெள்ளி பாத்திரங்களாக பார்த்து திருடுவதால் அவரது பெயருக்கு முன் சில்வர் என்ற அடைமொழியை போலீஸார் பயன்படுத்துகின்றனர். இவர் இன்று 200-ஆவது முறையாக கைது செய்யப்பட்டார்.
200-ஆவது முறையாக கைது என்பதை பார்க்கும் போது ஸ்டைல் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்த வடிவேல், ஒரு வீட்டில் திருட செல்லும் போது அந்த 100-ஆவது திருட்டு வெற்றி பெற வாழ்த்துகள் என கூட்டாளிகள் போஸ்டர் ஒட்டி, அவர் திருடும் இடம், நேரம் ஆகியவற்றுடன் குறிப்பிட்டிருப்பர். அதுதான் நினைவுக்கு வருகிறது.
தள்ளாத வயதிலும் இவரது திருட்டை பார்க்கும்போது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஊர்வசியின் பாட்டியாக வரும் பார்வதி திருமண வீட்டில் கண்ணில் தென்படும் பொருட்களை எல்லாம் திருடுவதும், அதை பேத்தி ஊர்வசி திருப்பி கொண்டு வந்து பாட்டி திருடிய இடத்தில் வைப்பதும் போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
அந்த காட்சிகளை போல் சீனுவாசனும் தைரியமாகவும் துணிச்சலுடனும் திருடியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications