கர்நாடகாவை சேர்ந்தவர் தமிழக முதல்வர்.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் சாருஹாசன்
தமிழகத்தின் அடுத்த முதல்வர் குறித்த சாருஹாசன் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகாவுக்கும் மத்திய அரசுக்கும் எதிராகவும் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என நடிகர் சாருஹாசன் பேசியிருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழக அரசியலில் இப்போது தடியெடுத்தவர்கள் எல்லாம் பெருந்தனக்காரர்களாகிவிட்டனர். இதுநாள் வரை வாய் மூடி மவுனிகளாக இருந்தவர்கள் திடீரென அரசியல் ஞானியாகிவிடுகிறார்கள்.

இந்த புதிய புத்தர்களுக்கு எந்த போதி மரம் ஞானத்தைத் தருகிறது என்பதுதான் புரிபடாத ஒன்றாக இருக்கிறது. இந்த திடீர் அரசியல் மேதாவிகளில் ஒருவர் நடிகர் சாருஹாசன்.
கடந்த சில மாதங்களாக கருத்து கந்தசாமியாகத்தான் பேசி வருகிறார் சாருஹாசன். சொந்த தம்பி கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை ஏதோ தீக்குழிக்குள் தள்ளிவிட்டதைப் போல அசூயையாக பார்க்கிறார் சாருஹாசன்.
அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்தை உச்சந்தலையில் வைத்து சாருஹாசன் கொண்டாடி வருகிறார். ஆன்மீக அரசியலை பேசும் ரஜினிகாந்தை பாஜகவின் முகமூடி என விமர்சிக்கிறவர்கள் உண்டு. ரஜினிகாந்த், பாஜக, சாருஹாசன் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது ஒன்றும் பேரதிர்ச்சியும் இல்லைதான்.
இப்போது தமிழர்களது தன்மானத்தை சீண்டும் வகையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என ஆரூடமாக அடித்துவிட்டுள்ளார் அரசியல் அதிமேதாவி சாருஹாசன். காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகா மீது கடும் கொதிப்புடன் இருக்கிறது தமிழகம்.
காவிரி பிரச்சனையில் தமிழர்களை தாக்குவது, தமிழர் பொருளாதாரத்தை திட்டமிட்டு தீக்கிரையாக்குவது என்பது கர்நாடகாவில் தொடர் நிகழ்வாக இருக்கிறது. இப்படியான நிலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர்தான் என சாருஹாசன் பேசிமுட்டுக் கொடுப்பது யாருக்கு?
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட கமல்ஹாசனுக்காக? அல்லது மகாராஷ்டிராவில் இருந்து கிளம்பி கர்நாடகாவில் குடியேறி தமிழகத்தின் முதல்வர் கனவில் மிதக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு முட்டுக் கொடுக்கவா? இப்படியான முட்டுக் கொடுத்தல் பாட்சாக்கள் தமிழர்களிடம் ஒருபோதும் எடுபடப் போவது இல்லை.
தமிழகத்தின் அரசியல் கள நிலவரம் ஒரே இரவில் அடியோடு மாறிப் போய்விடவும் இல்லை. திமுக, அதிமுகவுக்கான வாக்கு சதவீதங்களில் ஏற்ற இறக்கம் இருக்கலாம்.
அப்படியே திரிபுராவில் காங்கிரஸ் கட்சியை கபளீகரம் செய்து பாஜகவாக உருமாற்றிக் கொண்ட மேஜிக்குகள் தமிழகத்தில் எந்த புதிய கொம்பர்களாலும் நடத்த முடியாது. இந்த அடிப்படை யதார்த்தத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் சாருஹாசான் வகையறா உளறல் திலகங்கள் எதை தின்றால் பித்தம் தெளியும் என தரையில் படுத்து உருண்டு புரளுவது பரிதாபமாகத்தான் இருக்கிறது!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications