குக்கரை கூடவே தூக்கிக் கொண்டு திரியும் தினகரனின் கார்!
டிடிவி தினகரனின் காரில் அதிமுக சாயலில் உள்ள அவரது கட்சி கொடியின் நிறத்திலான அடுப்பில் சிறிய பொம்மை குக்கர் வைக்கப்பட்டுள்ள படம் வைரலாகி வருகிறது.
சென்னை: சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் காரில் அதிமுக சாயலில் உள்ள கட்சிக் கொடி நிறத்திலாலான அடுப்பில் சிறிய குக்கர் வைக்கப்பட்டுள்ளது போன்ற பொம்மையை வைத்துள்ள படம் தற்போது வைரலாகி வருகிறது.
ஆர்கே நகரில் கடந்த முறை தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை பிரபலப்படுத்த அவர் படாதபாடுபட்டார். இதையடுத்து இந்த தேர்தலிலும் அதுபோன்று தொப்பி சின்னம் கேட்டதற்கு அவருக்கு தரவில்லை. எனினும் அவருக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டுவிட்டது.

தாய்மார்களுடன் அதிகம் புழங்கும் சின்னம் என்பதால் தினகரனுக்கு இதை பிரபலப்படுத்துவது அந்த அளவுக்கு கஷ்டம் இல்லாத வேலையாகிவிட்டது.
கடைசியில் குக்கர் காயலாங்கடைக்குத்தான் செல்லும் என்றெல்லாம் அதிமுகவினர் தினகரனை விமர்சித்தனர். இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
பொதுவாக காரில் முன்பக்கத்தில் கடவுள் சிலைகளையோ வேறு ஏதேனும் பொம்மைகளையோ பொருத்துவது வழக்கமான ஒன்று. ஆனால் டிடிவி தினகரனின் காரில் அதிமுக கொடி சாயலில் தினகரனின் கொடி நிறத்திலான ஒரு அடுப்பில் மிகவும் சிறிய அளவிலான குக்கர் சின்னம் வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது வைரலாகியுள்ளது.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டதால் அதன் கட்சியில் நடுவில் உள்ள அண்ணா படத்துக்கு பதிலாக கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களை கொடியாக பயன்படுத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications